/* */

ஆலங்குடி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிஅருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் 300 பேர் கலந்துகொண்டனர்

HIGHLIGHTS

ஆலங்குடி அருகே கோயில்  திருவிழாவை முன்னிட்டு களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி
X

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட வம்பன் வீரமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு  நடைபெற்ற  ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டியது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட வம்பன் வீரமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 950காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.போட்டித் துவங்குவதற்கு முன்பு காளையர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

பின்னர் விழா கமிட்டியார்கள் பச்சைக் கொடி அசைத்து கோவில் காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை தொடக்கி வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று(வியாழன்) ஒரே நாளில் இரண்டு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதால் புதுக்கோட்டை மாவட்டமே விழாக்கோலம் பூண்டது. புதுக்கோட்டை வம்பன் வீரமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அண்டா, குண்டா, பிரிட்ஜ் , ஏர்கூலர், ஹெல்மெட் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் மற்ற வீரர்களுக்கும் வழங்கப்பட்டது.

வாடிவாசலில் இருந்து சீறிப் பாயும் காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினார்.காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகளும் வீரர்கள் பிடியில் சிக்காமல் துள்ளிக்குதித்து சென்ற ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த ஜல்லிக்கட்டு காளைகள் சிறந்த மாடுபிடி வீரர்களும் இரண்டு சக்கர வாகனம் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு தளத்தில் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ துறை சார்பில் மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டிருந்தது. காவல்துறை சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 24 March 2022 9:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  3. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  4. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  5. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  6. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  8. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  9. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  10. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...