/* */

ஏரிக்கரை மற்றும் சாலையை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

விசுவக்குடி கிராமத்தில் உடையும் தருவாயில் உள்ள ஏரிகரை மற்றும் சாலையை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்.

HIGHLIGHTS

ஏரிக்கரை மற்றும் சாலையை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

ஏரிக்கரையை பலப்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர்கள்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் விசுவக்குடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பாக கிராம இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். இதில் விசுவக்குடி கிராமத்தில் உள்ள ஏரி கரையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் மற்றும் கரைகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கும் போது ஏரிக்கரை உடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விசுவக்குடி அணைக்கட்டுக்கு செல்லும் சாலை பராமரிக்கப்படாமல் இருக்கிறது. இதனை சீர் செய்யவும், கிராமத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மலேரியா டெங்கு போன்ற நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இக்குறைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ள மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்.

Updated On: 27 July 2021 1:35 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!