/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் மழை வேண்டி மக்கள் கரகம் தூக்கி சிறப்பு வழிபாடு

ஆடி பெருக்கு தினத்தை முன்னிட்டு மழை பொழிய வேண்டி ஆண்டுதோறும் கரகம் தூக்கி சிறப்பு வழிபாடு செய்த கிராம மக்கள்

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் மழை வேண்டி மக்கள்  கரகம் தூக்கி சிறப்பு வழிபாடு
X

பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் தாலுகா,நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆடி பெருக்கு தினத்தை முன்னிட்டு மழை பொழிய வேண்டி ஆண்டுதோறும் கரகம் தூக்கி சிறப்பு வழிபாடு .

பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் தாலுகா,நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆடி பெருக்கு தினத்தை முன்னிட்டு மழை பொழிய வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா,நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆடி பெருக்கு தினத்தை முன்னிட்டு மழை பொழிய வேண்டிஆண்டுதோறும் கரகம் தூக்கி சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கரகம் தூக்குதல் நிகழ்ச்சி, நாட்டார்மங்கலம் பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டு, ஊர்வலமாக கரகத்தை தலையில் சுமந்த படியே செட்டிகுளம் வடபழனி என்றழைக்கப்படும், தண்டாயுதபாணி கோயிலின் மலை அடிவாரத்தில் உள்ள பஞ்சநதி தெப்பக் குளத்திற்கு வந்தனர்.

பின்னர், பக்தர்கள் குளத்தில் புனித நீராடி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் கரகத்தை தலையில் சுமந்தவாறு, நாட்டார்மங்கலம் கிராமத்தில் முக்கிய வீதி வழியாக சென்று செல்லியம்மன் கோவிலுக்கு வந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Updated On: 3 Aug 2021 5:58 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!