/* */

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 284 மனுக்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 284 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 284 மனுக்கள்
X

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது. குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்து வந்தும் மனுக்களை அளித்தனர்.

பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, தொழில் தொடங்க கடனுதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 284 மனுக்கள் பெறப்பட்டது.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ. லலிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ம.பாரதிதாசன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் எஸ்.சரவணன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 22 Nov 2021 4:22 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!