/* */

பெரம்பலூர் அருகே ஆற்றில் குளிக்கச்சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே ஆற்றில் குளிக்கச்சென்ற 3 பெண்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே வி.களத்தூரில் கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையின் போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கையடுத்து இந்த தடுப்பணையில் நீர் தேங்கி உள்ளதால் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த தடுப்பணையில் நீராடி செல்கின்றனர்‌.

இந்நிலையில் இனாம்அகரம் கிராமத்தை சேர்ந்த பத்மாவதி ,ரேணுகா சௌந்தர்யா, ராதிகா ஆகிய 4 பேர் இன்று இந்த தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது. குளித்துக் கொண்டிருந்த போது தவறி ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது‌. இவர்களுக்கு நீச்சல் தெரியாததால் 4 பேரும் நீரில் மூழ்கினர். இதனைக் கண்டு அருகில் தடுப்பணையில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் அவர்களைக் காப்பாற்ற முற்பட்டனர்.


இதில் பத்மாவதி, ரேணுகா, செளந்தர்யா ஆகிய 3 பேரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.ராதிகா என்பவர் மட்டும் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக வி.களத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இறந்த மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே கிராமத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இனாம் அகரம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Updated On: 17 Jan 2022 5:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  2. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  3. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  4. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  5. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...
  6. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி
  7. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  8. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  9. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  10. வானிலை
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? இதோ சில...