/* */

உதகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீர் பழுது

உள்ளாட்சி அமைப்புகளிலும் பழுதடைந்த எந்திரங்கள் மாற்றி மொத்தம் 15 எந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

உதகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீர் பழுது
X

பழுதடைந்த வாக்கு எந்திரங்களை மாற்றும் அதிகாரிகள்.

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி 15 உள்ளாட்சி அமைப்புகளுக்கு 491 வாக்குப்பதிவு எந்திரங்கள், 491 கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வாக்கு எந்திரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி முடிந்தது.

பணியின் போது ஊட்டி நகராட்சியில் 3 கட்டுப்பாட்டு எந்திரங்கள், ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளில் 12 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானது.

இன்று ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆணையாளர் காந்திராஜ் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டது. பழுதடைந்த 4 எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டு, மாவட்ட பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

அதற்கு பதிலாக 4 எந்திரங்கள் ஒதுக்கப்பட்டு, நகராட்சி பாதுகாப்பு அறையில் கொண்டு வந்து சீல் வைக்கப்பட்டது. உதகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீர் பழுது உள்ளாட்சி அமைப்புகளிலும் பழுதடைந்த எந்திரங்கள் மாற்றி மொத்தம் 15 எந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

Updated On: 17 Feb 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்