/* */

கீழ்குந்தா: முழு வீச்சில் தூய்மைப்பணிகள்

உதகை அருகே கீழ்குந்தா பேரூராட்சியில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காதோருக்கு அபராதம் .

HIGHLIGHTS

கீழ்குந்தா: முழு வீச்சில்  தூய்மைப்பணிகள்
X

குன்னூர் அருகே உள்ள கீழ்குந்தா பேரூராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நீலகிரி மாவட்டம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி நகராட்சி, பேரூராட்சி ,ஊராட்சி, மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கீழ்குந்தா பேரூராட்சியில் செயல் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் சமூக இடைவெளியை பின்பற்றவும் கிருமிநாசினிகள் பயன்படுத்தவும், மாஸ்க் அணியவும், அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும் பொது இடங்களில் எச்சில் துப்புவோர்களுக்கும் கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் வியாபாரம் செய்யும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் 25க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை கொண்டு பேருந்து நிலையங்கள் வணிக வளாகங்கள், பிரதான சாலைகள் என அனைத்துப் பகுதிகளும் தூய்மை படுத்தப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டது.

Updated On: 16 May 2021 8:08 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  2. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  3. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  4. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  7. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா