/* */

புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் கணேசன் தலைமையில் நடந்தது.

HIGHLIGHTS

புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

திருச்செங்கோடு நகராட்சி சார்பில் புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி ஆணையாளர் கணேசன் தலைமையில் நடந்தது. மகாதேவ வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, நகராட்சி துப்புரவு அலுவலர் வெங்கடாசலம், சேலம் தூய்மை இந்தியா திட்ட அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கணேசன் பேசுகையில், காற்றை மாசுபடுத்தும் வகையில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து புகையை உண்டாக்குவதால் பொதுமக்கள் மூச்சுத் திணறல் நோய்க்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. எனவே இதனை களைய புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட வேண்டும் என்பதை பெரியவர்களுக்கு அறிவுறுத்த இளைய சமூகத்தினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் பள்ளி மாணவ, மாணவிகளான உங்களிடம் இந்த திட்டம் குறித்து விளக்கி கூறியுள்ளோம்.

இதனை உங்கள் பெற்றோர், மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் எடுத்துக் கூறி புகையில்லா போகி கொண்டாடவும் நகராட்சி பணியாளர்களிடம் தேவையற்ற பொருட்களை ஒப்படைக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கலை நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவ- மாணவிகளை நகராட்சி ஆணையாளர் பாராட்டி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் மாணவ, மாணவிகள் புகையில்லா போகி கொண்டாடுவோம் என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்

Updated On: 10 Jan 2023 10:03 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!