/* */

கொல்லிமலையில் கேட்பாரற்றுக் கிடந்த 9 துப்பாக்கிகள் : போலீசார் மீட்டனர்

கொல்லிமலையில் பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் கேட்பாரற்றுக் கிடந்த 9 நாட்டுத் துப்பாக்கிகளை போலீசார் மீட்டனர்.

HIGHLIGHTS

கொல்லிமலையில் கேட்பாரற்றுக் கிடந்த  9 துப்பாக்கிகள் : போலீசார் மீட்டனர்
X

கொல்லிமலையில் போலீசார் மீட்ட நாட்டு துப்பாக்கி

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வசிக்கும் மலைவாழ் மக்கள், லைசென்ஸ் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கிகளை பயன்படுத்தி வருவதாக மாவட்ட போலீஸ் எஸ்.பிக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி, லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்போர், அவற்றை தாமாக முன்வந்து போலீசில் ஒப்படைத்தால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என போலீசார் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த 6 மாதத்தில் சுமார் 300 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கொல்லிமலை, வளப்பூர் நாடு பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் 9 நாட்டுத் துப்பாக்கிகள் கேட்டபாரற்றுக் கிடந்தன. இதனைக் கண்ட பஞ்சாயத்து தலைவர் செல்வம், வாழவந்தி நாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அங்கு சென்ற போலீசார் 9 நாட்டுத் துப்பாக்கிகளையும் மீட்டுச் சென்றனர். லைசென்ஸ் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் உடனடியாக போலீஸ் நிலையத்தில் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டுமென எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் அறிவுறுத்தியுள்ளார்.

Updated On: 5 Dec 2021 5:45 AM GMT

Related News