/* */

கொல்லிமலையின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற கலெக்டர் அழைப்பு

கொல்லிமலையின் வளர்ச்சிக்கு அனைத்து துறை அலுவலர்களம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், என்று நாமக்கல் கலெக்டர் வலியுறுத்தினார்.

HIGHLIGHTS

கொல்லிமலையின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற கலெக்டர் அழைப்பு
X

கொல்லிமலையில் நடந்த அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார். அருகில் சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசினார்.

இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வனத்துறை, தோட்டக்கலைத்துறை, தாட்கோ துறை, வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சித்துறை, பழங்குடியினா; நலத்துறை, சமூக நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, சுற்றுலா துறை உள்ளிட்ட பல்வேறு துறை மூலமாக கொல்லிமலையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து, கலெக்டர் ஆய்வு மேற்கொண்டர்.

அப்போது, கொல்லிமலையின் வளர்ச்சிக்கு அனைத்து அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். தோட்டக்கலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் காபி, மிளகு, பலா உற்பத்தி மற்றும் விற்பனை வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பழங்குடியினர் வசித்து வரும் வீடுகள் சேதமடைந்தால் உடனடியாக புதுப்பித்துத்தர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், டிஆர்ஓ துர்காமூர்த்தி, டிஆர்டிஏ திட்ட இயக்குநர் மலர்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பாலமுருகன், மாவட்ட சுற்றுலா துறை அலுவலர் சக்திவேல், பிடிஓக்கள் நடராஜன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், கொல்லிமலையில் சுற்றுலா முக்கியத்துவம் உள்ள இடங்களை மேம்படுத்த, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, கொல்லிமலை, ஆரியூர் நாடு, சோளக்காடு முதல் ஆரியூர் நாடு கஸ்பா வரை ரோடு அமைக்கும் பணி மற்றும் குண்டுனிநாடு, வேலிக்காடு முதல் சேரடி சாலை வரை ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சாலைப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On: 2 July 2021 7:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்