/* */

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சோசியல் மீடியா குறித்து விழிப்புணர்வு

சோசியல் மீடியாக்களில் நடைபெற்று வரும் குற்றங்கள் குறித்த சைபர் கிரைம் போலீசார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு  சோசியல் மீடியா குறித்து விழிப்புணர்வு
X

ராசிபுரம் தனியார் பள்ளியில் நடைபெற்ற, ஆன்லைன் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேதப்பிரவி பேசினார்.

சோசியில் மீடியாக்களில் ஆன் லைன் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக மாணவ மாணவிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் ஏடிஎஸ்பி செல்லபாண்டியன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வேதப்பிரவி, எஸ்.ஐ சிவக்குமார் உள்ளிட்டோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில், வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடங்களை பயன்படுத்தும் போது அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் தங்களது போட்டோக்களை, எந்தவித சோசியல் மீடியாவிலும் அப்லோட் செய்யக்கூடாது. தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க வேண்டும். ஆதார், பான் கார்டு எண், ஒடிபி. போன்ற தகவல்களை பரிமாற்றம் செய்யக்கூடாது என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், ஆன்லைன் வேலைவாய்ப்பு, ஆன் லைன் வங்கி கடன், கல்வி உதவி தொகை போன்ற அப்ளிகேஷன்கள் மூலம் எண்ணற்ற குற்றங்களை நடைபெறுகின்றன. எனவே இது போன்ற செயலிகளை பதவிறக்கம் செய்வதில் அதிக விழிப்புணர்வு தேவை என்றும் நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On: 22 April 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  2. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  3. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  6. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  8. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  10. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!