/* */

பரமத்திவேலூர் பகுதியில் தேங்காய் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்திவேலூர் பகுதியில் தேங்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் விற்பனை குழுவின், பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெறுகிறது. பரமத்திவேலூர், பாலப்பட்டி, மோகனூர், பாண்டமங்கலம், ஜேடர்பாளயைம், கபிலர்மலை பகுதிகளைச் சேர்ந்த தென்னை விவசாயிகள், தேங்காய்களைக் கொண்டு ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4,588 கிலோ தேங்காய் வரத்து வந்தது. இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.28-க்கும், குறைந்தபட்சமாக ரூ.18-க்கும், சராசரியாக ரூ.27-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1,18,309-க்கு விற்பனை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 1,783 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.28.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ.28-க்கும், சராசரியாக ரூ.28.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.50,973 மதிப்பில் விற்பனை நடைபெற்றது. கடந்த வாரத்தை விட தேங்காய் விலை உயர்ந்ததால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 20 Oct 2021 9:55 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...