/* */

வெண்ணந்தூர் பேரூராட்சிப் பகுதியில் நலத்திட்டப் பணிகள் : ஆட்சியர் ஆய்வு

namakkal news, namakkal news today- நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், வெண்ணந்தூர் பேரூராட்சி மற்றும் நடுப்பட்டி, செம்மாண்டப்பட்டி ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

வெண்ணந்தூர் பேரூராட்சிப் பகுதியில் நலத்திட்டப் பணிகள் : ஆட்சியர் ஆய்வு
X

namakkal news, namakkal news today- வெண்ணந்தூர் பேரூராட்சியில், ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

namakkal news, namakkal news today- வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், செம்மாண்டப்பட்டி ஊராட்சியில் ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் செம்மாண்டப்பட்டி முதல் நடுப்பட்டி வரை ஏரிக்கரை மீது தார்சாலை அமைக்கும் பணியினை ஆட்சியர் பார்வையிட்டார். அப்போது, நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் தரமான முறையில் சாலையினை அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் நடுப்பட்டி ஊராட்சி, செம்மாண்டப்பட்டியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் தற்போதைய நிலை, பணி முன்னேற்றம் ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செம்மாண்டப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவியர்களின் வருகை குறித்து கேட்டறிந்தார். மேலும் தொடக்கப்பள்ளியில் குடிநீர் வசதி, வகுப்பறை கட்டிடங்கள் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, செம்மாண்டப்பட்டி குழந்தைகள் மையத்தில், வருகை தரும் குழந்தைகள் எண்ணிக்கை, குழந்தைகள் வளர்ச்சி வகிதம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை விரிவாக ஆய்வு செய்தார். மேலும், வெண்ணந்தூர் பேரூராட்சியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில், பேரூராட்சி மயானத்தில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், வெண்ணந்தூர் பேரூராட்சியில் கடைவீதி மற்றும் சந்தையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தங்கம்மாள், வெண்ணந்தூர் பேரூராட்சி தலைவர் ராஜேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், வனிதா, பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Updated On: 9 July 2023 8:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  3. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  4. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  5. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  7. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம்...
  8. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  9. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  10. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...