/* */

வெண்ணந்தூர் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்: அமைச்சர் துவக்கம்

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

வெண்ணந்தூர் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்: அமைச்சர் துவக்கம்
X

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். அருகில் ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார்.


நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் ஸ்ரயோசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், அலவாய்ப்பட்டி பஞ்சாயத்தில், ஊராட்சியில் ஒன்றியப் பொது நிதியின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினையும், ஒ.செவுதாபுரம் பஞ்சாயத்து ஜி.ஏ.நகர் பகுதியில் ஒன்றியப் பொது நிதியின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினையும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

அதைனைத்தொடர்ந்து, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அலவாய்ப்பட்டி பஞ்சாயத்தில், நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 24 கிராம பஞ்சாயத்துகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் 28 பேர், தூய்மைக் காவலர்கள் 94 நபர்கள் என மொத்தம் 102 பேருக்கான சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

மேலும் தூய்மை பாரத இயக்கத்தன் மூலம், அலவாய்ப்பட்டி பஞ்சாயத்தில், ரூ.5.48 லட்சம் மதிப்பீட்டில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைத் திட்டத்தினை (பிளாஸ்டிக் மறுசுழற்சி மையம்) அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். அலவாய்ப்பட்டி ஊராட்சியில் பொது மக்களிடமிருந்து, பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கிலோ 1க்கு ரூ. 8 வீதம் பெறப்பட்டு இந்த மையத்தில் மறு சுழற்சி செய்யப்படுகிறது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தங்கம்மாள், வட்டார வளர்ச்சி அலுவர்கள் அ.பிரபாகரன், நாகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 12 May 2023 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்