/* */

நாமக்கல் நகராட்சியைக் கண்டித்து வரும் 15ம் தேதி காத்திருப்பு போராட்டம்

நாமக்கல் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து வருகிற 15ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சியைக் கண்டித்து வரும் 15ம் தேதி காத்திருப்பு போராட்டம்
X

பைல் படம்

சாக்கடை கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்று, நாமக்கல் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து வருகிற 15ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து விவசாயிகள் முன்னேற்றக்கழக தலைவர் செல்லராஜாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் நகராட்சிப் பகுதியில் இருந்து வெளியேறும், சாக்கடை கழிவுநீர் சுத்திகரிக்கப் படாமல் நேரடியாக லக்கமநாயக்கன்பட்டி, சிவியாம்பாளையம், சாலப்பாளையம், அலங்காநத்தம், வீசாணம், துசூர், வேட்டாம்பாடி, முத்துகாப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது.

இந்த தண்ணீர் அப்பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஓடை புறம்போக்கு, நீர்வழிப் பாதைகள், கிணறுகள், விவசாய நிலங்கள்,மற்றும் ஏரிகளுக்குச் செல்கிறத. இதனால் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு, அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், நீரை குடிப்பதற்கு பயன்படுத்த முடியவில்லை. மேலும், கால்நடைகளுக்கு குடிநீராக பயன்படுத்த முடியவில்லை. மாசுபட்ட தண்ணீரில் துணி துவைப்பதற்கு கூட முடியாமல் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று ஆண்டுகளாக நாமக்கல் நகராட்சி கழிவுநீரை தொடர்ந்து இந்தப் பகுதிகளுக்கே விடப்படுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் நோய்வாய்ப்பட்டு, தங்களது தோல் மற்றும் கால்களில் அரிப்பு ஏற்படுவதோடு , கால்நடைகள் இறக்கும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது. அதோடு பல்வேறு சுகாதார சீர்கேடுளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

நாமக்கல் நகராட்சியில் இருந்து கழிவு நீர் வெளியேற்றுவது சம்பந்தமாக பல முறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே இப்பிரச்சினையை, தமிழக முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்வதற்காக வருகின்ற 15ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல், நாமக்கல் நகராட்சி அலுவலகத்தின் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. விவசாய முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும், கழிவுநீரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் சார்பாகவும் நடைபெறும் இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 4 Sep 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!