/* */

சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் சென்றன

சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் சென்றன
X

நாமக்கல் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டன.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் அனைத்து கட்சியினர் முன்னிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி முறையில் குலுக்கல் நடைபெற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதன்படி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு முதற்கட்ட குலுக்கலில் 2049 வாக்குச்சாவடிகளுக்கு 2463 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 2463 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 2667 VVPAT எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதன்பின் இயந்திரங்கள் அனைத்தும் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.

Updated On: 13 March 2021 11:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!