/* */

வாழவந்தி மாரியம்மன் கோயில் திருவிழா முன்னேற்பாடு கூட்டம் திடீர் ரத்து

வாழவந்தி மாரியம்மன் கோயில் திருவிழா சம்மந்தமான கூட்டம் முன் அறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி.

HIGHLIGHTS

வாழவந்தி மாரியம்மன் கோயில் திருவிழா முன்னேற்பாடு கூட்டம் திடீர் ரத்து
X

பைல் படம்.

வாழவந்தி மாரியம்மன் கோயில் திருவிழா சம்மந்தமான கூட்டம், முன் அறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம், எஸ்.வாழவந்தியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில், ஆண்டு தோறும், குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை தக்கார் மூலம், 12ம் தேதி, மாலை 4 மணிக்கு கூட்டம் நடைபெறும் என கோயில் அறிவிப்பு பலகையில் நோட்டீல் ஒட்டப்பட்டது. மேலும், ஆட்டோ மூலம், சுற்று வட்டார கிராம மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. இந்நிலையில், 12ம் தேதி மதியம், 2 மணிக்கு, நிர்வாக காரணமாகவும், பாதுகாப்பு குறைபாடு காரணமாகவும், கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக, இந்துசமய அறநிலை துறை தக்கார் மூலம், கோவில் அறிவிப்பு பலகையில் மீண்டம் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

திடீரென கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதால், கோயில் அருகில் கூடிய சுமார் 18 கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது சம்மந்தமாக கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பதென அவர்கள் முடிவு செய்தனர். தகவல் அறிந்த ப.வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினார். அதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 13 April 2022 2:00 AM GMT

Related News