/* */

ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாண்மை அலுவலகத்தில் காலிப்பணியிடங்கள்

நாமக்கல் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாண்மை அலுவலகத்தில் காலியாக உள்ள 4 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாண்மை அலுவலகத்தில் காலிப்பணியிடங்கள்
X

நாமக்கல் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாண்மை அலுவலகத்தில் காலியாக உள்ள 4 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார இயக்கத்தின், நாமக்கல் மாவட்ட மேலாண்மை அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் 4 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (கொல்லிமலை-2, வெண்ணந்தூர்- 2) தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இப்பணிக்கு பெண்கள் மட்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் எம்.எஸ் ஆபிஸில் குறைந்த பட்சம் 3 மாத சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். 28-வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அந்தந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இதேபோன்ற திட்டங்களில் பணியாற்றிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதியான பெண்கள் தங்களது விண்ணப்பத்தை இம்மாதம் 25ம் தேதிக்குள் நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 12 May 2023 5:09 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  2. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  3. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  5. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  6. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  7. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம்...
  10. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...