/* */

பழையபாளையம் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் ராஜகோபுரம் அமைக்க வாஸ்து பூஜை

பழையபாளையம் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் 165 அடி உயரம், 5 நிலை ராஜகோபுரம் கட்டுமானப் பணிக்கான வாஸ்து பூஜை நடைபெற்றது.

HIGHLIGHTS

பழையபாளையம் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் ராஜகோபுரம் அமைக்க வாஸ்து பூஜை
X

பழையபாளையம் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் 165 அடி உயர ராஜகோபுரம் அமைப்பதற்கான, வாஸ்து பூஜை இன்று நடைபெற்றது.

பழையபாளையம் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் 165 அடி உயரம், 5 நிலை ராஜகோபுரம் கட்டுமானப் பணிக்கான வாஸ்து பூஜை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையம் ஏரிக்கரையில், சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் இக்கோயிலுக்கு தினசரி வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த கோயிலைப் புதுப்பித்து, திருப்பணிகள் செய்து, ராஜகோபுரம் அமைத்து, கும்பாபிசேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதை ஏற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின், இக்கோயிலில் 165 அடி உயரத்தில், 5 நிலை ராஜகோபுரம் அமைத்து திருப்பணிகள் செய்திட ரூ. 1.53 கோடி மதிப்பில் அனுமதி அளித்துள்ளார்.

இதையொட்டி, ராஜகோபுரம் கட்டும் பணி துவக்க விழா நடைபெற்றது. கடந்த ஏப். 6ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஸ்டாலின் திருப்பணியை துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து கோயிலில் ராஜகோபுரம் கட்டுவதற்காக வாஸ்து பூஜை விழா இன்று காலை நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம் நடைபெற்றது.

சேந்தமங்கலம் அட்மா குழு தலைவர் அசோகன், பஞ்சாயத்து தலைவர் அமுதா கிருஷ்ணன்,பரம்பரை அறங்காவலர்கள் முருகபாண்டியன்,சத்தீஸ்வரன், சுற்றுலா மற்றும் சமூக ஆராய்ச்சியாளர் பிரனவ்குமார் மற்றும் கோயில் குடிப்பாட்டுக்காரர்கள் திரளானோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 23 April 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்