நாமக்கல்லில் தக்காளி விலை கடும் சரிவு: பொதுமக்கள் நிம்மதி

நாமக்கல்லில் தக்காளி விலை திடீர் சரிவு ஏற்பட்டு ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல்லில் தக்காளி விலை கடும் சரிவு: பொதுமக்கள் நிம்மதி
X

நாமக்கல் நகரில் தக்காளி விலை திடீர் சரிவு ஏற்பட்டு ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர்மழையால், தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு கிலோ ரூ.20 விலையில் இருந்து மடமடவென உயர்ந்து கடந்த வியாழக்கிழமை ஒரு கிலோ தக்காரி ரூ.130 ஆக விற்பனையானது. ஆப்பிள் விலையை விட தக்காளி விலைய உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பல்வேறு சமூக வளைதளங்களிலும் தக்காளி குறித்த மீம்ஸ்கள் பகிரப்பட்டது. தக்காளி விலை அரசியலாக்கப்பட்டது.

தமிழகத்தில் கூட்டுறவு சொசைட்டிகள் மூலம் தக்காளியை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் ஒரு கிலோ தக்காளி விலை ஒரே நாளில் ரூ.130ல் இருந்து ரூ.60 சரிந்து ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலை சரிவால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 26 Nov 2021 2:15 AM GMT

Related News