/* */

நாமக்கல்லில் முப்பெரும் தேர்த்திருவிழா: ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் கோட்டையில் இன்று காலை ஸ்ரீ நரசிம்மர் சுவாமி தேரோட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் முப்பெரும் தேர்த்திருவிழா: ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு
X

நாமக்கல் கோட்டையில் இன்று காலை ஸ்ரீ நரசிம்மர் சுவாமி தேரோட்டம் நடைபெற்றது.

நாமக்கல்லில் இன்று முப்பெரும் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று காலையில் நடைபெற்ற ஸ்ரீ நரசிம்மர் தேரோட்டத்ததில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஒரே கல்லினால் உருவான மலையின் மேற்குப்பகுதியில் ஸ்ரீ நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்ம சுவாமி திருக்கோயில், மலையைக் குடைந்து குடவரைக் கோயிலாக உருவாக்கப்பட்டுள்ளது. அக்கோயிலின் மேற்குப்புறத்தில், 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. மலையின் கிழக்குப்புறத்தில் ஸ்ரீ அரங்கநாயகித் தாயார் உடனுறை அரங்கநாதர் திருக்கோயில் உள்ளது.

இந்த 3 கோயில்களிலும் பங்குணி தேர்த்திருவிழா கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. நடைபெற்று வருகிறது. இன்று 6ம் தேதி காலை கோட்டைப் பகுதியில் ஸ்ரீ நரசிம்மர் சவாமி தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ நாமகிரித்தாயார் மற்றும் நரசிம்மருக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. பின்னர் அருள்மிகு நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மப் பெருமாள் திருத்ததேருக்கு எழுந்தருளினார்.

தொடர்ந்து தேர் சக்கரங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நாமக்கல் லோக்சபா எம்.பி சின்ராஜ், டிஎஸ்பி சுரேஷ், கோயில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, அறங்காவலர்கள் டாக்டர் மல்லிகா, சீனிவாசன், செல்வ சீராளன், நகராட்சித் தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, கோயில் உதவி கமிஷனர் இளையராஜா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் தேர்வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து வந்து நிலை சேர்த்தனர்.

இன்று மாலை 4 மணிக்கு மெயின் ரோட்டில் ஸ்ரீ அரங்காநதர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் தேரோட்டமும் நடைபெற உள்ளது. முப்பெரும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட போலீஸ் எஸ்.பி கலைச்செல்வன் உத்தரவின் பேரில், நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் மேற்பார்வையில், நாமக்கல் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் ட்ரோன் மூலம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈபட்டனர். தேர்த்திருவிழாவை முன்னிட்டு நகரில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

Updated On: 8 April 2023 5:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...