/* */

வருவாய் துறையில் லஞ்சம் அதிகரித்துள்ளது: எம்.எல்.ஏ. பகீர் குற்றச்சாட்டு

நாமக்கல் மாவட்ட வருவாய் துறையில் லஞ்சம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈஸ்வரன் குற்றம் சாட்டினார்

HIGHLIGHTS

வருவாய் துறையில் லஞ்சம் அதிகரித்துள்ளது: எம்.எல்.ஏ. பகீர்  குற்றச்சாட்டு
X

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏ ஈஸ்வரன் மற்றும் திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் கொமதேக. ஈஸ்வரன் (திருச்செங்கோடு எம்.எல்.ஏ.) பேசுகையில், நான்கு மாதமாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். இந்த கூட்டம் குறித்து தகவல் அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதில், நான் கூட்டத்தில் கலந்து கொண்டதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. என்ன பேசினேன் என எதுவும் பதிவாகவில்லை. நாமக்கல் மாவட்டத்தில், வருவாய் துறையில் லஞ்சம் அதிகரித்துள்ளது. ஆன் லைன் மூலம் சான்றிதழ் வழங்கும் முறையிலும், எந்த விதமான லஞ்சமும் குறையவில்லை. வருவாய்த் துறையில் இருக்கும் அளவுக்கு லஞ்சம் வேறு எந்த துறையிலும் இருப்பதாக தெரியவில்லை. அதனால், சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு ஆட்சியர் முடிவு கட்ட வேண்டும். அவற்றை கட்டுப்படுத்த, மாதம் தோறும் ஆய்வு கூட்டம் நடத்தி கட்டுப்படுத்த வேண்டும்.

பாலசுப்ரமணியன் (பொதுச்செயலாளர், விவசாய முன்னேற்ற கழகம்) பேசுகையில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களுக்கு, தென்னை சாகுபடி செய்யும் சாகுபடி செய்யும் விவசாயிக்கு இனகவர்ச்சி பெட்டி வழங்குகின்றனர். ஒரு பெட்டி, வெளி மார்க்கெட்டில் ரூ. 200, மருந்து ரூ. 400 என, மொத்தம், 600 ரூபாய். ஆனால், வேளாண் துறையில், இரண்டு மருந்து ரூ. 1,200, பெட்டி ரூ. 200, மொத்தம் ரூ. 1,400. மானியம், ரூ. 700 போக, விவசாயிகளிடம் ரூ. 700 வசூல் செய்கின்றனர். மொத்த அடக்கவிலை ரூ. 500க்குள் வரும் நிலையில், இந்த விசயத்தில் பெரிய அளவில் மோசடி நடக்கிறது. இது குறித்து ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்

விவசாயி நடேசன் என்பவர் கூறுகையில், பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தில், விவசாயிகளுக்கு உதவித் தொகை ஒரு ஆண்டுக்கு ரூ. 8,000 ஆக உயர்த்தி உள்ளனர். தகுதி உள்ள விவசாயிகளுக்கு, 12வது தவணையை நிறுத்திவிட்டனர். ஒரு சில விவசாயிகளுக்கு மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். ஆனால், தகுதி உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கவில்லை என கூறினார்

சரவணன் (விவசாயி) பேசுகையில், : நாமகிரிப்பேட்டை ஒன்றியம், அரியாகவுண்டம்பட்டி–குருவாலா சாலை பகுதியில், தனியார் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று கூறினார்.

Updated On: 1 March 2023 1:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்