/* */

கொரோனா பணியில் அரசுடன் கரம் கோர்க்க அதிமுக தயார்: மாஜி அமைச்சர் தங்கமணி

கொரோனா தடுப்புப்பணியில் தமிழக அரசுடன் இணைந்து பணியாற்ற அதிமுக தயாராக உள்ளதாக, முன்னாள் அமைச்சரான தங்கமணி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

HIGHLIGHTS

கொரோனா பணியில் அரசுடன் கரம் கோர்க்க அதிமுக தயார்: மாஜி அமைச்சர் தங்கமணி
X

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ, ப.வேலூர் எம்எல்ஏ சேகர் ஆகியோர் கலெக்டர் மெகராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் தங்கமணி எம்எல்ஏ, ப.வேலூர் தொகுதி அதிமுக எம்எல் சேகர் ஆகியோர், மாவட்ட கலெக்டர் மெகராஜை நேரில் சந்தித்து, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உரியை நடவடிக்க எடுக்க வேண்டி மனுவை அளித்தனர். பின்னர், முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் ஏராளமானவர்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிகளில் போதுமான படுக்கை வசதி இல்லை.

ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி மிகவும் பற்றாக்குறையாக இருப்பதால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே வாய்ப்புள்ள இடங்களில் ஆக்சின் படுக்கை வசதியுடன் புதிய கெரோனா சிகிச்சை மையங்களை துவக்க வேண்டும்.

கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்றுவதுதான் முதல் கடமை. எனவே இந்த விசயத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். மாவட்ட அதிமுக சார்பில் தற்போது குமாரபாளையம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறோம்.

மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தால் அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு வழங்க தயாராக உள்ளோம். மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் அதிமுக மூலம் ரூ.20 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் மற்றும் உபகரனங்களை கொள்முதல் செய்துள்ளது. விரைவில் அவற்றை கலெக்டரிடம் வழங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 28 May 2021 12:14 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!