/* */

மோகனூரில் பயங்கர வெடிவிபத்து.. தரைமட்டமான வீடுகள்.. 4 பேர் உயிரிழப்பு

நாமக்கல் அருகே மோகனூரில் பட்டாசு வியாபாரி வீட்டில், பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

மோகனூரில் பயங்கர வெடிவிபத்து.. தரைமட்டமான வீடுகள்.. 4 பேர் உயிரிழப்பு
X

மோகனூரில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்ட பகுதியை, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் பார்வையிட்டார்.

நாமக்கல் அருகே மோகனூரில் பட்டாசு வியாபாரி வீட்டில், பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர், 11 பேர் காயமடைந்தனர். 20 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் நகரில் உள்ள மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தில்லை குமார். பட்டாசு விற்பனை செய்ய லைசென்ஸ் பெற்றுள்ள இவர், மோகனூர் அருகில் உள்ள குமரிபாளையத்தில் பட்டாசு குடோன் வைத்துள்ளார். அவர், இன்று புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பட்டாசு விற்பனை செய்யும் வகையில் அதிக அளவு பட்டாசுகளை, நேற்று குடோனில் இருந்து எடுத்து வந்து தனது வீட்டில் வைத்திருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் இன்று 31ம் தேதி அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட திடீர் விபத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் வீட்டில் இருந்த சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளன. இந்த தீ தில்லை குமார் வீட்டிற்கும் அருகில் இருந்து 5-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் பரவியது. அந்த வீடுகளும் முற்றிலும் இடிந்து தரைமட்டம் ஆனது. வெடி விபத்தில் அவரது வீட்டிற்கு அருகில் இருந்த மேலும் 20க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகளும் இடிந்து சேதம் அடைந்தன. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தில்லைக்குமார் (35) பட்டாசு விபத்தில் சுமார் 50 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி உயிர் இழந்தார். அவரது தாயார் செல்வி (60), மனைவி பிரிங்கா (20) ஆகியோரும் வீட்டின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். ஜேசிபி இயந்திரத்தின் மூலம் கட்டிட இடுபாடுகளை அகற்றி அவர்களது உடல்களை போலீசார் மீட்டனர். இந்த நிலையில், அவரது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த பெரியக்காள் (72) என்பவரும் உடல் சிதறி உயிரிழந்தார்.

மேலும் அவது வீட்டுக்கு அருகில் இருந்த வீடுகளில் வசித்து வந்த 11 பேர் பட்டாசு விபத்தில் காயமடைந்து நாமக்கல் மற்றும் மோகனூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு நாமக்கல், கரூர் மோகனூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. மேலும் சம்பவம் அதிகாலையில் நடைபெற்றதால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தீயணைக்கப்பட்டது. தற்போது அங்கு மேலும் யாராவது இடிபாடுகளில் சிக்கி உள்ளார்களா எனவும், சேதம் குறித்தும் வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் கிடைத்ததும் நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் மோகனூர் வந்து, பட்டாசு விபத்து நடைபெற்ற பகுதியை பார்வையிட்டார்.

சேலம் சரக போலீஸ் டிஐஜி பிரவீன்குமார் அபிநவ், நாமக்கல் ஏடிஎஸ்பி மணிமாறன், டிஎஸ்பி சுரேஷ், ஆர்டிஓ மஞ்சுளா, மோகனூர் தாசில்தார் ஜானகி உள்ளிட்ட அதிகாரிகள் சம்ப இடத்தில் முகாமிட்டு மீட்புப்பணிகளை கவனித்து வருகின்றனர். பட்டாசு குடோனுக்கு வேறு இடத்தில் அனுமதி பெற்றுள்ள நிலையில், வீட்டில் பட்டாசுகளை அதிகளவு பதுக்கி வைத்திருந்ததால் விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

Updated On: 2 Jan 2023 5:22 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...