/* */

கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்.

ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையமான, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் லோகநாதன் வரவேற்றார். மாநில பொருளாளர் மலர்கண்ணன், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்க வேண்டும். பணி நிரவலில் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு, சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். ரத்து செய்யப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நிர்வாகிகள் முருகேசன், கண்ணன், செந்தில், செல்வன் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 6 Jun 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  2. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  4. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  5. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  6. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  9. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’