/* */

புதிய நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் செங்கோல்: பிரதமருக்கு நாமக்கல் பாஜக பாராட்டு

தமிழகத்தில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட செங்கோலை, புதிய பார்லிமெண்டில் நிறுவிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, நாமக்கல் நகர பாஜக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

புதிய நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் செங்கோல்: பிரதமருக்கு நாமக்கல் பாஜக பாராட்டு
X

நாமக்கல் நகர பாஜக செயற்குழு கூட்டத்தில், நகரத் தலைவர் சரவணன் பேசினார்.

தமிழகத்தில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட செங்கோலை, புதிய பார்லிமெண்டில் நிறுவிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, நாமக்கல் நகர பாஜக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் நகர பாஜக செயற்குழு கூட்டம், தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் சேதுராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்தில் இருந்து கொண்டுசெல்ப்பட்டு 75 ஆண்டுகளாக, அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோலை, புதிய பார்லிமெண்ட் வளாகத்தில், சபாநாயகர் இருக்கை அருகில் நிறுவிய, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல்லில் உள்ள புராதன சின்னமான மலைக்கோட்டை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். அங்கு போதிய பாதுகாப்பு இல்லாததால், திருட்டு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் நடைபெறுகிறது. எனவே அங்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நாமக்கல் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ள வழியில் ரிங்ரோடு அமைப்பு பணிகள் துவக்கப்படாமல் உள்ளது.

பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக ரிங் ரோடு அமைக்க வேண்டும். நாமக்கல் நகரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் போதுப்பட்டி முதல் நல்லிபாளையம் வரை ரோடு ஓரங்களில் கோழி மற்றும் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இதை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொண்டிசெட்டிப்பட்டி குளத்தில் கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கமலாலயக் குளத்திற்கு பெயர்பலகை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 28 May 2023 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்