/* */

தமிழக அரசின் நில சீர்திருத்த சட்டத்தை வாபஸ் பெற விவசாயிகள் சங்கம் கோரிக்கை

namakkal news, namakkal news today- தமிழக அரசின் நில சீர்திருத்த சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று, விவசாயிகள் சங்கம் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

HIGHLIGHTS

தமிழக அரசின் நில சீர்திருத்த சட்டத்தை  வாபஸ் பெற விவசாயிகள் சங்கம் கோரிக்கை
X

namakkal news, namakkal news today- நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி.

namakkal news, namakkal news today- உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின், மாநில தலைவர் வேலுசாமி நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தண்ணீர் கடைமடை வரை செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியான நெல், கரும்பு, ஆவின் பால்களுக்கான உரிய விலையை திமுக அரசு அறிவிக்க வில்லை. இதுனால் விவசாயிகள் பெருத்த ஏமாற்றத்தில் உள்ளனர். உடனடியாக பாலுக்கான விலையை உயர்த்தி அறிவிப்பதுடன், நெல், கரும்பிற்கு தமிழக அரசின் ஆதரவு விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

முதலமைச்சர் தானும் டெல்டாக்காரன் என விவசாயிகளுக்கு ஆறுதலாக சொன்னாலும், டெல்டா பகுதியில் இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலை, விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவை தொகை வழங்க வில்லை, அதை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோங்காய் மற்றும் கொப்பரை விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் கள்ளுக்கடையை திறக்க வேண்டும்.

மத்திய அரசு கோதாவரி - காவிரி ஆறு இணைப்பு திட்டத்தை கைவிட்டுவிட்டது. உடனடியாக நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த பட்ஜெட் தொடரில் நிறைவேற்றப்பட்ட, நிலச்சீர்திருத்த சட்டத்தின்படி, விவசாயிகளின் நிலைத்தை எவ்வித முன் அறிவிப்பும் இன்று அரசு கையகப்படுத்தலாம். இது வெளிநாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவான சட்டம். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார். எனவே இந்த சட்டத்தை தமிழக அரச திரும்பப்பெற வேண்டும்.

மேகதாதுவில் அணையை கட்டுவோம் என அங்குள்ள அமைச்சர் சிவகுமார் கூறுகின்றார். அவர் தமிழகத்தை சீண்டி பார்க்கின்றார். அவ்வாறு தொடர்ந்து சீண்டிப் பார்த்தால் நெய்வேலியில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் மின்சாரத்தை தடுத்து நிறுத்துவோம். தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விவசாயிகளை ஒன்று திரட்டு சென்னை கோட்டையை நோக்கி முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.

Updated On: 14 Jun 2023 4:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்