/* */

தளிகை பஞ்சாயத்தில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி

தளிகை பஞ்சாயத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

HIGHLIGHTS

தளிகை பஞ்சாயத்தில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி
X

நாமக்கல் அருகே, தளிகை கிராமத்தில் நடைபெற்ற, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், தளிகை பஞ்சாயத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தளிகை பஞ்சாயத்தில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கிய நிகச்சி, தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட நிகழ்ச்சி, மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சி, 75-வது சுதந்திர திருநாளையொட்டி தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்த நிகழ்ச்சி, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்ச்சி, 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி துவக்க விழா ஆகிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தனர்.

மேலும், நீர்வளத்துறையின் சார்பில் ஆறுகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்ச்சி, புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கிய நிகழ்ச்சி ஆகியவற்றின் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி, ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கிய நிகழ்ச்சி, கொரோனா தடுப்பூசி போடும் முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்து கொண்டனர்.

Updated On: 12 May 2023 5:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?