/* */

கோமாரி நோய்: கால்நடைகளை பரிசோதனை செய்து வாங்க வேண்டுகோள்

கோமாரி நோய் தாக்கம் உள்ளதால், கால்நடைகளை பரிசோதனை செய்து வாங்க வேண்டும் என, பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

HIGHLIGHTS

கோமாரி நோய்: கால்நடைகளை பரிசோதனை செய்து வாங்க வேண்டுகோள்
X

இது குறித்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக, பசு, எருது, எருமை மற்றும் கன்றுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு கோமாரி என்ற வைரஸ் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நோய் தாக்குதலுக்கு ஆளான கால்நடைகளின் நாக்கு, வாய் மற்றும் உதடுகளில் கொப்புளங்கள் ஏற்பட்டு புண் உண்டாகும். இதனால் கால்நடைகள் தீவனம் உண்ண முடியாது. கால் நடைகள் மிகவும் இளைந்து காணப்படும். மேலும் கால் குழம்புகளின் இடுக்கில் கொப்புளங்கள் தோன்றி புண்ணாகி விடும். இதனால் மாடுகள் நிற்க முடியாமல் சிரமப்படும். மருந்து போட்டாலும் புண்களை ஆறுவதில்லை. நோய் தாக்கிய கால்நடையின் திறன் முழுமையாகப் பாதிப் படையும். நோய் தீவிரமான நிலையில் மாடுகள் இறக்க நேரிடும். நோய் தாக்கிய மாட்டில் பால் குடிக்கும் கன்றுகள் இறந்து போகும்.

எனவே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வெளியிடங்களில் இருந்தோ, சந்தைகளில் இருந்தோ கால்நடைகளை வாங்கும் போது கோமாரி நோய் இருக்கிறதா என்பதை சோதனை செய்து வாங்குவது கட்டாயமாகும். இந்த வைரஸ் நோய் கால்நடைகளில் பரவாமல் தடுப்பதற்கு, நாமக்கல் மாவட்டத்திலுள்ள 3,31,124 கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடும் பணி, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கால்நடை வளர்ப்போர் தவறாமல் தடுப்பூசி முகாம்களுக்கு கால்நடைகளை அழைத்துச் சென்று ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 16 Dec 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!