/* */

மோகனூரில் ஐஸ் கட்டியுடன் கோடை மழை: பொது மக்கள் மகிழ்ச்சி

மோகனூரில் ஐஸ் கட்டியுடன் கோடை மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

மோகனூரில் ஐஸ் கட்டியுடன் கோடை மழை: பொது மக்கள் மகிழ்ச்சி
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக வெய்யிலின் தாக்கத்தால், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் நிலவுகிறது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கிவிடுகின்றனர்.

இந்த நிலையில் 9ம் தேதி மாலை 4 மணியளவில் மோகனூர் பகுதியில், மேகங்கள் திரண்டு திடீரென மழை பெய்யத்துவங்கியது. இடி, மின்னலுடன் ஐஸ் கட்டி மழை பெய்தது. பெரியவர்கள் ஆச்சரியத்துடன் கோடை மழையை பார்த்து ரசித்தனர். சிறுவர்கள் ஐஸ் கட்டி மழையை கையில் பிடித்து விளையாடி மகிழ்ந்தனர். கன மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

காற்று வேகமாக அடித்ததால் மோகனூர் பகுதியில் சுமார் 3 மணி நேரம் மின்சாரத்தடை ஏற்பட்டது. கோடை மழை காரணமாக, வெப்பம் குறைத்து, ஜில்லென்று குளிர் காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இன்றுறு காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பதிவன மழையளவு விபரம்: மோகனூர் 34 மி.மீ., பரமத்திவேலூர் 1 மி.மீ., திருச்செங்கோட 1 மி.மீ., கொல்லிமலை 15 மி.மீ., மொத்தம் 51 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

Updated On: 10 April 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’