/* */

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை : கலெக்டர் எச்சரிக்கை

கோடை விடுமுறையின்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்

HIGHLIGHTS

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை : கலெக்டர் எச்சரிக்கை
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங்.

கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழக அரசின் உத்தரவின்பேரில், பள்ளிக் கல்வித்துறை மூலம், பள்ளிகளுக்கு 2022-2023 ஆம் கல்வியாண்டில் 29.4.2023 முதல் பள்ளிகள் திறக்கும் வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தவிடுமுறை நாட்களில் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வருகை புரிவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். மேலும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் ஏதும் நடைபெறக் கூடாது என ,அனைத்து நகராட்சி பள்ளிகள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.சி. பள்ளிகள், துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களுக்கு திட்டவட்டமாக அறிவிக்கப்படுகிறது.

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடைபெறுவதாக புகார்கள் வந்தால் சம்மந்தபட்ட பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோடை விடுமுறை நாட்களில் பள்ளிகள் நடைபெற்றால், பெற்றோர்கள் தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்

தொலைபேசி எண்கள்: நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் 04286 - 232094, 94899 00303, மாவட்ட இடைநிலைக் கல்வி அலுவலகம் 04286 - 223762, 94899 00301, மாவட்டக் கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்) 04286 - 293981 90808 38995.

Updated On: 27 April 2023 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?