/* */

ஸ்ரீ நந்தகோபால சுவாமி திருக்கோயில் கும்பாபிசேக விழா: புதுச்சேரி கவர்னர் பங்கேற்பு

பாமா, ருக்மணி சமேத நந்தகோபாலசுவமி திருக்கோயில் கும்பாபிசேக விழாவில் புதுச்சேரி கவர்னர் உள்ளிட்ட திரளான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

ஸ்ரீ நந்தகோபால சுவாமி திருக்கோயில் கும்பாபிசேக விழா: புதுச்சேரி கவர்னர் பங்கேற்பு
X

ஸ்ரீ நந்தகோபாலசுவாமி திருக்கோயில் கும்பாபிசேக விழாவில், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், ஸ்ரீபுரம் பொற்கோவில் சக்தி அம்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகனின் சொந்த ஊர், நாமக்கல் மாவட்டம், கோனூர் ஆகும். இவரது குல தெய்வம் கோயில், பாமா ருக்மணி சமேத நந்தகோபாலசுவாமி திருக்கோயிலாகும். இக்கோயில் மோகனூர் தாலுக்கா கே.புதுப்பாளையத்தில் அமைந்துள்ளது. முருகன் அமைச்சரான பிறகு நேர்த்திக்கடனாக, தனது குல தெய்வம் கோயிலுக்கு திருப்பணிகள் செய்தார்.

இக்கோயிலில் துவார பாலகர், ஸ்ரீ கருடன், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ மதுரைவீரன், ஸ்ரீ நல்லேந்திரசாமி, ஸ்ரீ வீரமாத்தியம்மன், ஸ்ரீ கன்னிமார் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் மற்றும் மூலவர் சிலைகள் புதுப்பிக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக கும்பாபிசேக விழா நடைபெற்று வந்தது. இன்று 14ம் தேதி திங்கள்கிழமை காலை 7 மணிக்கு விநாயகர் பூஜையுடன் கும்பாபிசேக விழா தொடங்கியது. யாகசாலை பூஜைகள் பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்று, அதிர்வேட்டுகள் முழங்க, புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் பொற்கோவில் நாராயணி பீடம் சக்தி அம்மா தலைமையில், வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி பட்டாச்சாரியார்கள் கும்பாபிசேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் மூலவர் சுவாமிக்கு கும்பாபிசேகம் நடைபெற்றது. தொடர்ந்து தச தரிசனம், மகா தீபாராதணை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மத்திய இணை அமைச்சர் முருகன் வரவேற்றார். புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாமக்கல் எம்.பி. சின்ராஜ், முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ, பாஜக எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், சி.கே.சரஸ்வதி, நைனார் நாகேந்திரன், காந்தி, பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

Updated On: 14 March 2022 9:15 AM GMT

Related News