/* */

நாமக்கல்லில் அக். 8ம் தேதி, சனாதன தர்ம விளக்க மாநாடு

Namakkal news- சனாதன தர்ம விளக்க மாநாடு குறித்த விளக்க மாநாடு, வருகிற 8ம் தேதி, நாமக்கல்லில் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் அக். 8ம் தேதி, சனாதன தர்ம விளக்க மாநாடு
X

Namakkal news- நாமக்கல்லில், சனாதன தர்ம விளக்க மாநாடு (கோப்பு படம்)

Namakkal news, Namakkal news today- சனாதன தர்மம் அல்லது நிலையான தத்துவஞானம், இசைவு, நம்பிக்கை என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமயத்தைக் குறித்துவந்த பெயராகும். இந்துக்களைப் பொறுத்தவரை, இது, மனிதனால் உருவாக்கப்பட்டவற்றைக் கடந்து, தனிமனித விருப்பு வெறுப்புக்களைக் குறிக்காமல், தூய உணர்வுபூர்வமான அறிவியலைக் குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்றும் சனாதனத்தைப்பற்றி கருத்துக்கள் உள்ளன.

இந்த நிலையில் சனாதனம் என்பது இந்துக்களின் நம்பிக்கை, மனிதர்களின் கடமைகள் என்று இந்தியாவில் உள்ள சில அரசியல் கட்சிகளும், அது சாதிய பாகுபாடு என்று தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளும் பொது வெளியில் பேசி வருவதால் சமீபகாலமாக, சனாதன தர்மம் என்பது இந்தியாவில்உள்ள அனைவராலும் அடிக்கடி கேட்கப்படும் ஒரு சொல்லாக மாறியுள்ளது. இது குறித்து இன்னும் பலருக்கு போதுமான புரிதல் இல்லாமல் உள்ளதால் சனாதனத்தின் பொருள் குறித்து தெரிந்துகொள்ள பலரும் ஆர்வமாக உள்ளனர்.

இந்த வேளையில், தமிழ்நாடு இந்து தர்ம சக்தி அமைப்பின் சார்பில் சனாதன தர்ம விளக்க மாநாடு வருகிற அக். 8ம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது. 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மாலை 3 மணிக்கு, நாமக்கல் - திருச்செங்கோடு மெயின் ரோட்டில் உள்ள கோஸ்டல் திருமண மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்து தர்ம சக்தி மாநில தலைவர் டாக்டர் நித்ய சர்வானந்தா மாநாட்டிற்கு தலைமை வகிக்கிறார். துணைத்தலைவர் ஜவகர்பாபு, பொதுச்செயலாளர் தேவசேனாபதி, பொருளாளர் முருகானந்தா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராமசீனிவாசன் மாநாட்டில் கலந்துகொண்டு, சனாதன தர்மம் குறித்து விளக்கிப் பேசுகிறார். தேசிய சிந்தனைப் பேரவை தலைவர் திருநாவுக்கரசு சனாதனம் வளர்த்த சான்றோர்கள் எ ன்ற தலைப்பில் பேசுகிறார். பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் சனாதன தர்மத்தில் அரசியல் மாண்பு என்ற தலைப்பில் பேசுகிறார்.

சனாதன தர்ம விளக்க மாநாட்டை முன்னிட்டு, பத்திரிக்கை வெளியீட்டு விழா, நாமக்கல் அருள்மிகு ஸ்ரீ நரசிம்மர் திருக்கோயிலில் நடைபெற்றது. ஸ்ரீ நாமகிரித்தாயார் மற்றும் ஸ்ரீ நரசிம்மர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாநாட்டு பத்திரிக்கையினை, இந்து தர்ம சக்தி அமைப்பினர் வெளியிட்டு, பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

Updated On: 29 Sep 2023 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்