/* */

ரயில்களே ஓடாமல் காத்து வாங்கும் சேலம் - நாமக்கல் - கரூர் வழித்தடம்

ரயில்களே ஓடாமல் காத்து வாங்கும் சேலம் - நாமக்கல் - கரூர் வழித்தடத்தால் பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

ரயில்களே ஓடாமல் காத்து வாங்கும் சேலம் - நாமக்கல் - கரூர் வழித்தடம்
X

நாமக்கல் ரயில் நிலையம்.

ரயில்கள் ஓடாமல் காத்து வாங்கும் சேலம்- நாமக்கல்- கரூர் வழித்தடத்தில் புதிய ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாமக்கல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் பேரில் ரூ.1,000 கோடி செலவில் உருவான சேலம்-கரூர் அகல ரயில் பாதை வழித்தடத்தில் அதிகப்படியான ரயில்கள் இயக்கப்படாததால், ரயில்வே ஸ்டேஷன்கள் மற்றும் ரயில்பாதை காற்று வாங்குகிறது.

இன்றைய சூழலில் பெயரளவிற்கு மட்டும்மே ரயில்கள் இயக்கப்பட்டு வருவது பயணிகளை வேதனையடைய செய்துள்ளது. தமிழக ரயில்வே வழித்தடங்களில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட மாவட்டங்களையும், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் சேலம்-கரூர் இடையே புதிய அகல ரயில்பாதையை கடந்த 2013 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் உருவான சேலம்-கரூர் வழித்தடம், கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இன்றி, பயனற்றதாகவே தற்போது வரை இருக்கிறது. இவ்வழித்தடத்தில் சென்னை-பாலக்காடு எக்ஸ்பிரஸ், பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்-ஓகா எக்ஸ்பிரஸ், சேலம்-கரூர் பாசஞ்சர் ஆகிய ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.

அதிலும் தற்போது கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பின் முன்பு நிறுத்தப்பட்ட சில ரயில்கள் இன்னும் இயக்கபடவில்லை. ரயில்கள் அதிகம் இயக்கப்படாததால் நாமக்கல், ராசிபுரம், மோகனூர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் தூங்கி வழிகின்றன. நடமாட்டம் இல்லாததால், ரயில்வே ஸ்டேஷன்களில் ஒரு டீ கடைகூட இல்லை. குடிநீர் வாங்குவதற்கு கூட கடைகள் இல்லை.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட சேலம் - நாமக்கல் - கரூர் வழித்தடம் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எந்த நோக்கத்திற்காக சுமார் ரூ.1,000 கோடி செலவிடப்பட்டதோ, அதை நிறைவேற்ற ரயில்வே நிர்வாகம், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சேலத்தில் இருந்து ஈரோடு - கரூர் மார்க்கமாக 6 க்கு மேற்பட்ட ரயில்களை தென் மாவட்டங்களுக்கு தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. இதில், குறைந்தது 4 ரயில்களையாவது சேலம், நாமக்கல், கரூர் வழியே தென் மாவட்டங்களுக்கு இயக்கினால், வட மாவட்ட பயணிகள் பெரிதும் பயனடைவார்கள். இக்கோரிக்கையை தொடர்ந்து மக்கள், முன்னெடுத்துச் சென்றும் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது.

இதுபற்றி நாமக்கல் மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவிக்கையில், சேலம், நாமக்கல் மாவட்ட மக்கள், மதுரை மற்றும் திருச்சிக்கு செல்ல நேரடி ரயில் வசதி இல்லை. பஸ்களை நம்பி தான், இதுநாள் வரை பயணிக்கின்றனர். அதனால், சேலத்தில் இருந்து மதுரை, திருச்சி, தஞ்சாவூருக்கு நாமக்கல் வழியே புதிதாக ரயில்களை இயக்க வேண்டும்.

நாமக்கல் வழியாக செல்லும் சென்னை - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில், மும்பை - நாகர்கோவில் ஆகிய இரண்டு வண்டிகளும் நாமக்கல்லில் நின்று செல்ல வேண்டும். அரக்கோணம் - சேலம் மற்றும் சென்னை எக்மோ - சேலம் ரயில்களை நாமக்கல் வழியாக கரூர் வரை நீட்டிக்க வேண்டும். கொரோனா காலத்திற்கு முன்பு நாமக்கல் வழியாக இயங்கிய சேலம்-திருச்சி, நாகர்கோயில்-கச்கேகுடா, சென்னை சென்ட்ரல்-நாகர்கோயில், ஜபல்பூர்-திருநெல்வேலி ஆகிய ரயில்களை மீண்டும் இயக்கவேண்டும்.

ஏற்கனவே சென்னை மற்றும் வட மாநிலங்களில் இருந்து ஈரோடு மார்க்கம் வழியே தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல ரயில்களில், சிலவற்றை மட்டுமாவது சேலம்-நாமக்கல்-கரூர் வழித்தடத்தில் திருப்பி விட வேண்டும். இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும், தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கும் தொடர்ந்து கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளோம். இதவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியாவது இவ்வழித்தடத்தை பயன்படுத்தும் வகையில் அதிகப்படியான ரயில்களை இயக்க வேண்டும் என தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த எம்பிக்கள் ராஜேஷ்குமார், சின்ராஜ் இருவரும் நாமக்கல் வழியாக கூடுதல் ரயில்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Updated On: 4 March 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...