/* */

தமிழகம் முழுவதும் ஒரே விலையில் முட்டை விற்பனை: சங்க தலைவர் தகவல்

தமிழகம் முழுவதும் ஒரே விலையில் முட்டை விற்பனை செய்யப்படும் என சங்க தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழகம் முழுவதும் ஒரே விலையில் முட்டை விற்பனை: சங்க தலைவர் தகவல்
X

நாமக்கல்லில், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அருகில் செயலாளர் சுந்தர்ராஜ்.

முட்டை அனைத்து கோழிப்பண்ணைகளிலும், இன்று முதல் என்.இ.சி.சி. அறிவிக்கும் விலைக்கு மட்டுமே முட்டை விற்பனை செய்யப்படும் என பண்ணையாளர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ், நாமகக்கல்லில் உள்ள சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயித்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது வரை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) வாரத்தில் இண்டு முறை முட்டை விலையை நிர்ணயம்செய்து அறிவித்தது. சில நேரங்களில் நெஸ்பேக் மற்றும் முட்டை வியாபாரிகள் சங்கத்தினரும் என்இஇசிசி விலையில் இருந்து மைனஸ் செய்து பண்ணைகளில் இருந்து கொள்முதல் செய்யும் விலையை அவர்கள் அறிவித்தனர். இதனால் பண்ணையாளர்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. அதே நேரம் சில்லரை விற்பனையாளர்கள் என்இசிசி விலைக்கு மேல் லாபம் வைத்து விற்பனை செய்வதால், பொதுமக்கள் முட்டைக்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருந்தது.

கடந்த 6 மாதங்களில் கோழிப்பண்ணைகளில் முட்டை உற்பத்தி அதிகரித்து, முட்டை விற்பனை சரிவடைந்ததால், பல வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு முட்டையை கொள்முதல் செய்தனர். இதனால் கோழிப்பண்ணை தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. இதை மாற்றி அமைக்க கோழிப்பண்ணையாளர்கள், முட்டை வியாபாரிகள் ஆலோனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் முட்டைக்கு மைனஸ் விலை இல்லாமல் என்இசிசி அறிவிக்கும் விலையை மட்டுமே, தமிழகம் முழுவதும் பண்ணையாளர்களும், வியாபாரிகளும் கடைபிடிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி இன்று மே 1 முதல் என்இசிசி அறிவிக்கும் விலைக்கு மட்டுமே முட்டையை பண்ணைகளில் விற்பனை செய்யப்படும். கேரள உள்ளிட்ட மாநிலங்களில் முட்டை விற்பனைக்காக சில பண்ணையாளர்களும், வியாபாரிகளும் முட்டைகளை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அவ்வாறு கொண்டு செல்லும் முட்டைகளை தூரத்திற்கு தகுந்தவாறு எந்தெந்த நகரங்களில் எவ்வளவு மார்ஜின் லாபம் வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்பதையும் என்இசிசி நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. அதே நேரத்தில் சிறிய முட்டை, நடுத்தர முட்டை, பெரிய முட்டை என 3 பிரிவுகளாக முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும். இன்று ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.05 ஆகவும், ஏற்றுமதிக்கு அனுப்பி வைக்கப்படும் நடுத்தர முட்டை ரூ.3.95 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முட்டை விலை நிர்ணயம் செய்யவும், முட்டை விற்பனையை கண்காணிக்கவும், என்இசிசி மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியின் முடிவின்படி இனி நாள்தோறும் மாலை 6 மணிக்கு முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும். அந்த விலை அடுத்த நாளுக்கு அமலில் இருக்கும். தற்போது அனைத்து மாநிலங்களிலும் முக்கிய திருவிழாக்கள் முடிவடைந்துள்ளதால், முட்டை விற்பனை அதிகரித்து வருகிறது. எனவே வரும்நாட்களில் விலை உயர வாய்ப்புள்ளது. எனவே பண்ணையாளர்கள் அனைவரும் என்இசிசி அறிவிக்கும் விலைக்கு மட்டுமே முட்டையை விற்பனை செய்து ஒத்துழைக்க வேண்டும்.

மத்திய அரசின் கால்நடை மற்றும் விலங்குகள் பாதுகாப்புத்துறை 2029ம் ஆண்டு முதல் கோழிப்பண்ணைகளில் கோழிகள் வளர்க்கப்படும் கூண்டின் அளவை சுமார் 25 சதவீதம் வரை அதிகரித்து, கோழிகளுக்கு கூண்டுகளில் இடவசதியை அதிகரிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. எனவே இது நடைமுறைக்கு வந்தால் தற்போதுள்ள கோழி வளர்ப்பில் சுமார் 25 சதவீதம் வரை குறையக் கூடும். எனவே புதிய பண்ணை அமைப்பவர்களும், ஏற்கனவே உள்ள கூண்டுகளை மாற்றி புதிய கூண்டுகள் அமைப்பவர்களும், இந்த விதிக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும். மேலும் தற்போது 80 வாரங்களுக்கு மேல் முட்டையிட்டு வயதான கோழிகளை பண்ணையாளர்கள் விற்பனை செய்ய முன்வரவேண்டும். முட்டை உற்பத்தி ஓரளவு குறைந்தால்தான் முட்டை தேக்கநிலை நீங்கி நல்ல விலை பெற முடியும் என்று அவர் கூறினார். பேட்டியின் போது, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜ் உடனிருந்தார்.

Updated On: 1 May 2023 7:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...