/* */

மோகனூர் அருகே ரூ.700 கோடியில் தடுப்பணை: ஒருவந்தூருக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை

மோகனூர் - நெரூர் ரூ.700 கோடி மதிப்பு தடுப்பணை திட்டத்தை ஒருவந்தூர் பகுதிக்கு மாற்ற விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

மோகனூர் அருகே ரூ.700 கோடியில் தடுப்பணை: ஒருவந்தூருக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை
X

காவிரியில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை இடமாற்றம் செய்யக்கோரி கோரிக்கை மனு அளிக்க நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள் முன்னேற்றக் கழகத்தினர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் - கரூர் மாவட்டம் நெரூர் இடையே ரூ.700 கோடிமதிபில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை ஒருவந்தூர் பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்றக்கழக தலைவர் செல்லராஜாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் நாமக்கல் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து அளித்துள்ள கோரிக்கை மனுவில், கடந்த 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, விவசாயிகளின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே ஒருவந்தூரில் இருந்து திருச்சி மாவட்டம் நெரூர் வரை காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.700 கோடி மதிப்பீட்டில் கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும் இந்த திட்ட ஆய்வுப்பணிக்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை திமுக வெற்றிபெற்று ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். கடந்த ஆகஸட் 23ம் தேதி சட்டசபையில் நடைபெற்ற பொதுப் பணித்துறை நீர்ப்பாசன மானிய கோரிக்கையின்போது நாமக்கல் மாவட்டம், மோகனூர், கரூர் மாவட்டம் நெரூர் இடையே காவிரிஆற்றின் குறுக்கே ரூ.700கோடி மதிப்பீட்டில் கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை மோகனூர் பகுதி விவசாயிகள் அனைவரும் முழுமனதுடன் வரவேற்கிறோர். ஆனால் கடந்த ஆட்சியின்போது நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூர் - கரூர் மாவட்டம் நெரூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படும் என்று அன்றைய அறிவிப்பை தற்போது மோகனூர் - நெரூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

இந்த அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டம் மோகனூர் - கரூர் மாவட்டம் நெரூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டால் மோகனூருக்கும் மேல்பகுதி மட்டுமே தண்ணீர் தேங்கி நிற்கும். மோகனூருக்கு கீழ்பகுதியாகிய கிழக்குபகுதிக்கு தண்ணீர் வராமல் விவசாய நிலங்கள் காய்ந்து பாலைவனமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டு பலகோடி ரூபாய் திட்டமானது வீணாகும் சூழ்நிலை ஏற்படும்.

மேலும் மோகனூரை தாண்டி ஆற்றில் அமைந்துள்ள காட்டுப்புத்தூர் பகுதியைச் சார்ந்த சுமார் 10ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் காட்டுப்புத்தூர் வாய்க்கால் பாசன கொரம்புக்கு தண்ணீர் வராமலும், ஒருவந்தூர் நீரேற்றுப்பாசன கூட்டுறவு சங்கத்தின் மூலம் காவிரி ஆற்றில் தண்ணீர் எடுத்து பாசனம் பெறும் 870ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரின்றி வறண்டு பாலைவனமாகும் சூழ்நிலை ஏற்பட்டும். ஒருவந்தூரில் காவிரி ஆற்றில் செயல்பட்டு வரும் பட்டணம் சீராப்பள்ளி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் சுமார் 356 கிராமங்களுக்கு செல்லும் குடிதண்ணீர் முழுவதும் தடைபடும் சூழ்நிலை ஏற்படக்கூடும்.

எனவே தமிழக முதல்வர் உடனடியாக தற்போதைய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள, மோகனூருக்குப் பதிலாக, ஒருவந்தூர் அல்லது வடுகப்பட்டி - கரூர் மாவட்டம் நெரூர் இடையே தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 10 Sep 2021 1:45 PM GMT

Related News