/* */

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு அரவை மார்ச் 31 வரை நீட்டிக்க கோரிக்கை

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின், கரும்பு அரவைக் காலத்தை மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க கரும்பு விவசாயிகள் வேண்டுகோள்.

HIGHLIGHTS

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு அரவை மார்ச் 31 வரை நீட்டிக்க கோரிக்கை
X

பைல் படம்.

இதுகுறித்து மோகனூர் கூட்டுறவு சர்க்கரை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் மணிவண்ணன், சென்னையில் உள்ள சர்க்கரைத் துறை கமிஷனருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இந்த ஆண்டிற்கான தற்போதைய கரும்பு அரவை நடைபெற்று வருகிறது. தற்போது ஆலை மூலம், விவசாயிகள் பதிவு செய்த 38 ஆயிரம் டன் கரும்பு இதுவரை அறுவடை செய்யாமல் உள்ளது. இந்த நிலையில் ஆலையில் அரவையை 20ம் தேதியுடன் முடிக்க உள்ளனர்.

இதன்படி இம்மாதம் 20ம் தேதியுடன் ஆலையில் அரவை நிறுத்தப்பட்டால், விவசாயிகளின் தோட்டங்களில் உள்ள பதிவு செய்யப்பட்ட 18 ஆயிரம் கடன் கரும்பு அரவை செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார நஷ்டத்திற்கு உள்ளாவார்கள். எனவே கரும்பு விவசாயிகளின் நலன் கருதி ஆலையின் அரவைக் காலத்தை 10 நாட்கள் நீட்டித்து, வருகிற மார்ச் 31வரை ஆலையில் கரும்பு அரவை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 17 March 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!