/* */

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்

நாமக்கல்லில் நடந்த நிகழ்வில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

HIGHLIGHTS

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய  வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்
X

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் அமைச்சர் மதிவேந்தன்.

நாமக்கல்லில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கலெக்டர் அலுவலகத்தில், பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.6,840 வீதம் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.82,080- மதிப்பில் தையல் மெசின்களையும், ரூ.2,780 மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு காதொலி கருவியினையும், ரூ.650 மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ஊன்று கோலும், ரூ.6,450 மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு மடக்கு சக்கர நாற்காலியும், பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில் தலா ரூ.7,000/- வீதம் 10 பயனாளிகளுக்கு ரூ.70,000/- மதிப்பில் வெண்பட்டுப் புழு வளர்ப்பு பயிற்சிக்கான பயிற்சி உபகரணங்களும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ6,000 வீதம் 4 பயனாளிகளுக்கு ரூ.24,000/- மதிப்பில் சலவைப் பெட்டிகளும், தலா ரூ6,000 வீதம் 2 பயனாளிகளுக்கு ரூ.12,000 மதிப்பில் தையல் மெசின்களும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தன்னார்வலர்கள் மூலம் முதலாம் ஆண்டு கல்லூரி கட்டணத்திற்காக 2 மாணவர்களுக்கு ரூ.47,500 மதிப்பில் கல்வி உதவித் தொகையினையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் தலா ரூ.75,000 வீதம் 3 பயனாளிகளுக்கு ரூ.2,25,000 மதிப்பில் வீட்டுதனை பட்டாக்களும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டுகளையும், 3 பயனாளிகளுக்கு விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் அடையாள அட்டைகள் என மொத்தம் 41 பயனாளிகளுக்கு ரூ.4,70,460 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்ரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 19 Jun 2023 9:49 AM GMT

Related News