/* */

நாமக்கல்லில் நடைபெறவுள்ள ரேஷன் கடை பணியாளர் தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்லில் நாளை ரேஷன் கடை பணியாளர் தேர்வு மற்றும் 16ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

நாமக்கல்லில் நடைபெறவுள்ள ரேஷன் கடை பணியாளர் தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு முகாம்
X

நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (15-ம் தேதி) ரேசன் கடைகளில் காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள, ரேசன் கடைகளில் 181 விற்பனையாளர்கள் மற்றும் 19 கட்டுனர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடத்திற்கான நேர்முகத்தேர்வு நாளை (15-ம் தேதி) நடைபெற உள்ளது. இதில் பபணியிடத்திற்கான நேர்முகத் தேர்வு டிச. 15 முதல் டிச. 27ம் தேதி வரையும், கட்டுனர் பணியிடத்திற்கான தேர்வு டிச. 28, 29 ஆகிய நாட்களில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

இதில் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள், அரசு உதவி மருத்துவர் நிலைக்கு குறையாத மருத்துவரிடம் உடற்தகுதிச் சான்றிதழை பெற்று கூட்டுறவு நிறுவனத்தில் பணியில் சேரும்போது வழங்க வேண்டும்.

அதுபோல் மாற்றத்திறனாளி முன்னுரிமைக்கு ஆதாரமாக தமிழக அரசின் மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள் பதிவு புத்தகம், தகுதி வாய்ந்த மருத்துவ அலுவலரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்க வேண்டும். இதில் ஏதேனும் ஒரு சான்றிதழுடன் மாற்றுத்திறனாளிகள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் .


தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல்லில் வரும் 16ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தனியார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும், நேரடியாக சந்திக்கும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மாதம் தோறும், மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

அதன்படி, வருகிற 16ம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணிக்கு, மாவட்டவேலை வாய்ப்பு மையத்தில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. தனியார் துறை நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான நபர்களை, அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம்.

முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், கேஷியர், டைப்பிஸ்ட், மெக்கானிக். சேல்ஸ் அசிஸ்ட்டென்டு போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யவுள்ளனர்.

இந்த முகாமில் 10ம் வகுப்பு வகுப்பு தேர்ச்சி பெற்றவர், தேர்ச்சி பெறாதவர், பிளஸ் 2, டிப்ளமோ, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் கம்ப்யூட்டர் (ஜாவா, டேலி) அனுபவமுள்ள ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 14 Dec 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?