/* */

அப்பாடா... நிம்மதி...! இன்று பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை

இன்று பெட்ரோல், டீசல் விலை உயராமல் நேற்றைய விலையே நீடிப்பதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

அப்பாடா... நிம்மதி...! இன்று பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை
X

பைல் படம்.

மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கம்பெனிகள், சர்வதேச விலை நிலவரத்துக்கு இணையாக, தாங்களே விலையை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதனால் கடும் கொரோனா தொற்று பரவல் காலத்திலும். அரசு விடுமுறை நாட்களிலும், அடிக்கடி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் 5 வட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றதால், கடந்த 3 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

ரஷ்யா-உக்ரைன் போரால் கடந்த 1 மாதமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, எண்ணெய் கம்பெனிகள் மீண்டும், கடந்த மார்ச் 22ம் தேதி முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த துவங்கினர். ஏப்.1ம் தேதி விலை உயர்த்தவில்லை. ஏப். 2ம் தேதி முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரத் துவங்கியது. 14 நாட்கள் விலை உயர்வுக்குப்பின் இன்று 7ம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. நேற்றைய விலையே நீடிக்கிறது.

நாமக்கல் பகுதியில் இன்று 7ம் தேதி, பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.111.48 ஆகவும், பிரிமியம் பெட்ரோல் ரூ.115.79 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.101.59 ஆகவும் நீடிக்கிறது.

Updated On: 7 April 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சொல்லி அடிக்கும் கில்லி பெண்கள்..! சாதனை மங்கைகள்..!
  2. உலகம்
    டெஸ்லாவில் அதிரடி: மூத்த நிர்வாகிகளை திடீர் பணிநீக்கம்
  3. திருப்பூர்
    திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை
  4. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  5. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  6. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  7. வீடியோ
    Happy Birthday Hitman🥳🎂 ! #rohitsharma #rohit #hitman #happy...
  8. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  9. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர்...
  10. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!