/* */

பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Namakkal news-திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில், பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை  மையம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

Namakkal news-திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, நாமக்கல் பாராளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன்.

Namakkal news, Namakkal news today- திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் பாராளுமன் தொகுதியில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள், வரும் ஜூன் 4ம் தேதி எண்ணப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மையம் திருச்செங்கோடு, எளையாம்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய 6 சட்டபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் அந்த கல்லூரி வளாகத்தில் தவனித்த கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை, வேட்பாளர்களின் முகவர்கள், அரசு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருவதற்கான பாதை அமைப்பு, பாதுகாப்பு வசதிகள், செய்தியாளர்களுக்கான அறை, முகவர்கள் மற்றும் காவல் துறையினருக்கான சி.சி.டி.வி கண்காணிப்பு, உள்ளே வருவதற்கு மற்றும் வெளியே செல்வதற்கான வழிகள், குடிநீர், கழிப்பறை, மின்சார மற்றும் இணையதளம் உள்ளிட்ட வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், டிஆர்ஓ சுமன், திருச்செங்கோடு ஆர்டிஓ சுகந்தி, டிஎஸ்பி இமயவரம்பன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தவமணி, திருச்செங்கோடு தாசில்தார் விஜய்காந்த் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 17 April 2024 2:15 AM GMT

Related News