/* */

பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்தி வேலூர் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
X

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம், புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், பரமத்தி, கபிலர்மலை, எருமப்பட்ட வட்டாரங்களில் அதிக அளவில் மரவள்ளிக்கிழங்க பயிரிடப்படுகிறது. பரமத்தி வேலூர் சுற்று வட்டாரங்களிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டு ஏராளமான விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டுள்ளனர். இப் பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சேகோ ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் சேகோ ஆலை உரிமையாளர்கள் கிழங்கில் உள்ள மாவுச்சத்து புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு ஒரு டன் ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது ரூ.500 வரை விலை உயர்ந்து ஒரு டன் ரூ.6,500க்கு விற்பனையாகிறது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மரவள்ளிப் பயிரில் மாவுப் பூச்சி தாக்குதல் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், உற்பத்தி குறைந்துள்ளது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 15 Sep 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்