/* */

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம்: முதல்வருக்கு ஆசிரியர்கள் கோரிக்கை

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்கக்கோரி முதல்வருக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம்: முதல்வருக்கு ஆசிரியர்கள் கோரிக்கை
X

பைல் படம்.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்க பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர், நாமக்கல் ராமு, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில், 1.4.2003க்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வுதியத் திட்டத்தை அறிவிக்க எடுக்க வேண்டும். ராஜஸ்தான் மாநில அரசு, பட்ஜெட் உரையில் 1-4-2003 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் பழைய ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதைப்போன்று தமிழகத்திலும் அறிவிக்கமுதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது போராட்ட களத்திற்கு நேரில் வந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவோம் என்று தற்போதைய தமிழக முதல்வர் அறிவித்தார். மேலும், திமுகதேர்தல் அறிக்கையிலும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக ஆட்சி அமைந்ததும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசில் பணிபுரியும் லட்சக்கணக்கான அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது முக்கியமான வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 25 Feb 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!