/* */

மின்சார வாரியத்தில் அக்டோபர் மாத்ததிற்கான குறைதீர் கூட்டங்கள் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில், மின்சார வாரியத்தின் சார்பில், அக்டோபர் மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

மின்சார வாரியத்தில் அக்டோபர் மாத்ததிற்கான குறைதீர் கூட்டங்கள் அறிவிப்பு
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டத்தில், மின்சார வாரியத்தின் சார்பில், அக்டோபர் மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் மின்சார வாரியத்தின் சார்பில், ஒவ்வொரு மாதமும், செயற்பொறியாளர் அலுவலகங்களில், மின் நுகர்வோர்களின் கோரிக்கைகள் நேரடியாக கேட்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் நேரடியாக மனுக்களை அளித்து, தங்களின் கோரிக்கைகளை தீர்வு பெறலாம்.

வருகிற அக். 4ம் தேதி, புதன்கிழமை காலை 11 மணிக்கு, நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலக்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. 11ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு பரமத்தி வேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 18ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 21ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு பள்ளிபாளையம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 25ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு, ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது. பொதுமக்கள், மின்வாரியம் சம்மந்தமாக புகார்கள் மற்றும் கோரிக்கைகளை, சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் வந்து, மனுக்களை அளித்து தீர்வு பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 29 Sep 2023 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...