/* */

நாமக்கல் மாவட்டத்தில் கடைகளுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரும் திங்கள்கிழமை முதல் புதிய நேரக் கட்டுப்பாடுகளை கலெக்டர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் கடைகளுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: கலெக்டர்
X

கலெக்டர் ஷ்ரேயாஷிங் . 

நாமக்கல் மாவட்டத்தில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரும் திங்கள்கிழமை முதல் புதிய நேரக் கட்டுப்பாடுகளை கலெக்டர் அறிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வணிகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எஸ்.பி சரோஜகுமார் தாக்கூர் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசியதாவது:

வருகிற 23ம் தேதி, திங்கள்கிழமை முதல், நாமக்கல் மாவட்டத்தில் காய்கறி, மளிகை, பேக்கரி, டீக்கடைகள், மளிகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் (பால் விற்பனையகம் மற்றும் மருந்துக்கடைகள் தவிர) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. ஹோட்டல்கள் மற்றும் சாலையோர உணவகங்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கவேண்டும்.

காய்கறி மொத்த வியாபாரம் நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 7 மணி வரை செயல்படலாம். திருமண மண்டபங்களில் அதிகபட்சம் 50 நபர்களைக் கொண்டு மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று நிகழ்ச்சிகளை நடத்தலாம். இந்த நேரக் கட்டுப்பாடுகளை அனைத்து வணிகர்களும் முறையாக பின்பற்றி கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைபிடித்து வணிகத்தைத் தொடரலாம் என கலெக்டர் தெரிவித்தார். திரளான வணிகர் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Aug 2021 12:00 PM GMT

Related News