/* */

எலச்சிபாளையம் அருகில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

namakkal news, namakkal news today- நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், கோக்கலை ஊராட்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

எலச்சிபாளையம் அருகில் தமிழக அரசின்  சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
X

namakkal news, namakkal news today- எலச்சிபாளையம் அருகில் நடைபெற்ற, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

namakkal news, namakkal news today- இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று காலத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கிய நிகழ்வு, தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட நிகழ்வு, சுதந்திர தினவிழாவில் தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்த நிகழ்ச்சி, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்ச்சி, 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு உத்தரவு வழங்குவதன் துவக்க விழா நிகழ்ச்சி, நீர்வளத்துறையின் சார்பில் ஆறுகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்ச்சி, புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கிய நிகழ்ச்சி ஆகியவற்றின் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி, கொரோனா தடுப்பூசி போடும் முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்து கொண்டனர்.

Updated On: 9 July 2023 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்