/* */

நாமக்கல் நரசிம்மசாமி திருவிழா : அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா

நாமக்கல் நரசிம்மசாமி பங்குனி தேர்த்திருவிழா 3ம் நாள் நிகழ்ச்சியாக, அனுமந்த வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் நரசிம்மசாமி திருவிழா : அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா
X

நாமக்கல் நரசிம்ம சாமி பங்குனி தேர்த்திருவிழா 3ம் நாளில், சுவாமி அனுமந்த வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நாமக்கல் நகரின் மையமாக விளங்கி வரும், ஒரே கல்லினால் உருவான மலையின் கிழக்குப்புறத்தில் அருள்மிகு அரங்கநாயகி தாயார் உடனுறை அரங்காநாதர் கோயில் குடவறைக்கோயிலாக அமைந்துள்ளது. மலையின் மேற்குப்புறத்தில் அருள்மிகு நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மசாமி திருக்கோயில் குடவறைக்கோயிலாக அமையப்பெற்றுள்ளது.

மலைக்கு மேற்குப்பக்கத்தில், 18 அடி உயரத்தில் அருள்மிகு ஆஞ்சநேயர் சாமி திருக்கோயில் அமைந்துள்ளது. புராண சிறப்புப்பெற்ற இத்திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தேர்த்திருவிழாவை, கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல்நாள், அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 2ம் நாள் சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலகா நடைபெற்றது. நேற்று 13ம் தேதி இரவு அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

Updated On: 14 March 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்