/* */

நாமக்கல்: ரெட் கிராஸ் சார்பில் கூடுதலாக இலவச அமரர் ஊர்தி சேவை!

நாமக்கல் மாவட்டத்தில், உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச்செல்ல ஏதுவாக, ரெட்கிராஸ் சார்பில் கூடுதலாக ஒரு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்: ரெட் கிராஸ் சார்பில்  கூடுதலாக இலவச அமரர் ஊர்தி சேவை!
X

நாமக்கல் ரெட்கிராஸ் சொசைட்டிசார்பில் இயக்கப்பட உள்ள, இறந்தவர்களின் 6உடல்களை தனித்தனியே எடுத்துச்செல்லும் வாகனம்.

தமிழ்நாடு சுகாதார சேவைத் திட்டத்தின் சார்பில், அரசு ஆஸ்பத்திரிகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சாலை விபத்துகளிலும் இறந்த நபர்களின் உடல்களை, மயானத்திற்கோ அல்லது சம்மந்தப்பட்டவரின் இல்லத்திற்கோ தமிழகம் முழுவதுமாக இலவசமாக அனுப்பி வைக்கும் பணியை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி செய்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இத்திட்டத்திற்கு, நாமக்கல் மாவட்டத்தில் 3 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 2012 முதல், மே 2021 வரை 9,134 உடல்கள் இந்த வாகனங்களில் அனுப்பப்பட்டுள்ளன. தற்போது நிலவிவரும் கொரோனோ தொற்று காலத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இணை நோய் மற்றும் வயது முதிர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து நாமக்கல் மற்றும் வெளியூர்களில் இருந்து, மின் மயானங்களுக்கு இறந்தவர்களின் உடல்களைக் கொண்டு செல்ல காலதாமதம் ஏற்பட்டது. இதை தவிர்க்கவும், இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கவும், நாமக்கல் கலெக்டர் மெகராஜ் அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், நாமக்கல்லுக்கு கூடுதலாக ஒரு வாகனம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் ஒரே நேரத்தில், தனித்தனியாக 6 உடல்களை எடுத்துச்செல்ல முடியும். அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும், இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல எவ்வித கட்டணமும் இன்றி, இந்த ஊர்தி இயக்கப்படும். இவ்வாகனத்தை அழைக்க, 155377 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Jun 2021 12:27 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்