/* */

நாமக்கல் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை: கொலையாளிகளை தேடும் போலீசார்

Murder Case- நாமக்கல் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை தொடர்பாக கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறர்கள்.

HIGHLIGHTS

நாமக்கல் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை:  கொலையாளிகளை தேடும் போலீசார்
X

கொலை செய்யப்பட்ட குமரேசன்.

Murder Case- நாமக்கல் திருச்சி ரோட்டிலுள்ள ஜெய்நகரைச் சேர்ந்தவர் குமரேசன் ( 48). ரியஸ் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு, நாமக்கல் சேந்தமங்கலம் ரோட்டில் உள்ள மதுக்கடை பாரில் குமரேசன் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, நள்ளிரவு 12 மணி அளவில், காரில் நண்பர்களுடன் வீடு திரும்பியுள்ளார். நாமக்கல்- திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது காரில் வந்த நண்பர்களுக்கும், குமரேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக மாறியுள்ளது. அப்போது, காரில் வந்தவர்களில் ஒருவர் குமரேசனின் கழுத்தில் கத்தியால் குத்தினார். குமரேசன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து காரில் வந்தவர்களும், குத்திய நபரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். குமரேசன் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமரேசன் இறந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து குமரேசனின் மனைவி துர்கா நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் வந்த குமரேசனின் நண்ணபர்கள், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் குமரேசனை குத்திக்கொலை செய்தார்களா, தொழில் போட்டி அல்லது பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை ஏதேனும் உள்ளதா, என விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் திரண்ட குமரேசனின் உறவினர்கள், கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் அடைந்த உறவினர்கள், உடலை பெற்றுச்சென்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 July 2022 10:59 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  4. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  6. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  8. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  9. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  10. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...