/* */

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை 133வது பிறந்த நாள் விழா..

Namakkal Kavignar Images-நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிறந்த நாளை முன்னிட்டு, அமைச்சர் மதிவேந்தன் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

Namakkal Kavignar Images
X

Namakkal Kavignar Images

Namakkal Kavignar Images-நாமக்கல் நகரில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவில்லம் அமைந்துள்ளது. அவரது 133வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகழையும், நினைவையும் போற்றிடும் வகையில், தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும், நினைவு இல்லத்தில், தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறை சார்பில், கிளை நூலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் மோகனூரில், 1888. அக். 19ல், வெங்கட்ராமப்பிள்ளை, அம்மணியம்மாளுக்கு, மகனாக பிறந்த ராமலிங்கம்பிள்ளை எழுதிய நூல்களில், மலைக்கள்ளன் (நாவல்), காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்), பிரார்த்தனை (கவிதை), நாமக்கல் கவிஞர் பாடல்கள், திருக்குறள் புதிய உரை உள்ளிட்டவை மிகவும் சிறப்பு பெற்றவை. 1912ல், 5ம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவையொட்டி நடந்த ஓவியக்கண்காட்சியில், காட்சிப்படுத்தப்பட்ட இவரது ஓவியம் தங்கப்பதக்கம் வென்றது. பன்முகத்திறமை கொண்ட நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளையின் ஓவியத்திறமைக்கு சான்றாகும்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளையின், 133-வது பிறந்த நாள் விழா, அவரது நினைவு இல்லத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். எம்.பி. ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கவிஞர் ராமலிங்கம்பிள்ளையின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் விழாவில் கலந்து கொண்ட, கவிஞரின் பேத்தி டாக்டர் வித்யா சத்தியகிரிக்கு அமைச்சர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். விழாவையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார் உள்ளிட்டோர் துவக்கி வைத்துப் பார்வையிட்டனர். ஏடிஎஸ்பி சேகர், பிஆர்ஓ சீனிவாசன், ஏபிஆர்ஓ கோகுல், நூலக வாசகர் வட்ட தலைவர் மோகன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதேபோல் மோகனூரில் வெற்றித்தமிழர் பேரவை, வ.உ.சி. பேரவை சார்பில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கவிஞரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பேரவை உறுப்பினர்கள் நாராயணசாமி, அமல்ராஜா, பிலால், சரவணன், டவுன் பஞ்சாயத்து திமுக பொறுப்பாளர் குமரவேல் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 20 April 2024 10:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?